தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே பைபாஸ் ரோட்டில் இருந்து அரசூர் பூச்சிக்காடு கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பிரதான போக்குவரத்து நடைபெறும் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.