கன்னங்குறிச்சி-ஏற்காடு சாலையை இணைக்கும் சின்னகொல்லப்பட்டி அய்யனாரப்பன் கோவில் ரோடு மிக முக்கியமானதாகும். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனால் போக்குவரத்து நிறைந்த பகுதியாக இது உள்ளது. மேலும் தனியார் சட்டக்கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் இந்த சாலையில் செல்கின்றனர். சாலை நடுவில் இரும்பு குழாய் தற்போது சேதமடைந்து உள்ளது. இதனால் வாகனங்களின் டயர்கள் அதன் மீது ஏறுவதால் பழுது ஏற்படுகிறது. மேலும் புதிதாக வருபவர்கள் இரும்பு குழாய் மீது மோதி, நிலை தடுமாறுகிறார்கள். இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.