ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வேகத்தடைகளுக்கு வெள்ளைக்கோடு வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி விடுகின்றனர். மேலும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறு வேகத்தடைகளும் இரவு நேரங்களில் தெரிவதில்லை. எனவே அப்பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கும் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை உள்ளது.