கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், வேலாயுதம்பாளையம், தேசிய நெடுஞ்சாலை செக்கு மேடு பகுதியில் சாலையை அகலப்படுத்தம் பணிகள் தொடங்கியது. அதற்காக பள்ளம் தோண்டப்பட்டு ஒரு மாததிற்கு மேல் ஆகியும் பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.