ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு நோக்கி செல்லும் சாலையில், பழமை மிக்க பாலாறு பழைய பாலத்தின் மீது புல், ெசடிகள் வளர்ந்துள்ளது. இது பாலத்தின் மீது நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது. அந்தப் புல், ெசடிகள் வளர்வது பாலத்தை மேலும் சேதம் அடைய செய்து விடும். பழமை மிக்க பாலத்துக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். எனவே புல், ெசடிகளை அகற்றி பாலத்தைப் பராமரிக்க வேண்டும்.
ஆர்.குணசேகரன், ராணிப்பேட்டை