சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

Update: 2025-07-20 17:26 GMT

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த அன்னங்குடி கிராமத்தில் உள்ள துர்க்கையம்மன் கோவில் எதிரில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சாலையில் மழை வரும்போதெல்லாம் ஒரு அடி உயரத்துக்குமேல் மழைநீர் தேங்கும் அவலம் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அந்தச் சாலையின் இருபக்கமும் மழைநீர் வழிந்தோட கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-கஜேந்திரன், கே.வி.குப்பம்.

மேலும் செய்திகள்