சோளிங்கர் ஒன்றியம் செக்கடி குப்பம் ஊராட்சி பெரிய தெருவில் மழைக்காலங்களில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் மழை நீர் தேங்கி உள்ளது. இந்தப் பகுதியில் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ரேஷன் கடை, ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவை உள்ளன. அவைகளுக்கு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மழை நீரை அகற்றவும், வடி கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, செக்கடிகுப்பம்.