வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் ஈத்கா மைதானம் அருகில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அங்குள்ள ரவுண்டானா பகுதியில் மழைநீர் வெளியேறாமல் குட்டைபோல் தேங்குகிறது. இதேபோல் வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. மேற்கண்ட இடங்களில் தேங்கும் மழைநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும், மேலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமாரசாமி, வாணியம்பாடி.