திருப்பத்தூர் தாலுகா மட்றபள்ளி கிராமத்தில் போடப்பட்ட தார் சாலையில் தொடர் மழை காரணமாக திருப்பத்தூர்-மட்றபள்ளி சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். மழைநீர் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மாணிக்கம், திருப்பத்தூர்.