கே.வி.குப்பம் தாலுகா சென்னாங்குப்பத்தை அடுத்த மேல்புதூர் மற்றும் ஏ.என்.புதூர் கிராம தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளத்தால் வாகன விபத்துகள் நடக்கின்றன. பள்ளத்தை சரி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பொதுமக்கள் மண் எடுத்து வந்து பள்ளத்தில் கொட்டி நிரப்பி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சீர் செய்ய வேண்டும்.
-சந்தோஷ்குமார், சென்னாங்குப்பம்.