தார் சாலையில் பள்ளம்

Update: 2025-09-14 17:44 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர். அங்குள்ள வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப்பணிகள் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள தார் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தில் யாரும் விழுந்து விடக்கூடாது என உடைந்து கிடந்த சிறிய கான்கிரீட் சிலாப் துண்டு மற்றும் மரப்பலகையை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தப் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயபிரகாஷ், வேலூர்.

மேலும் செய்திகள்