அரக்கோணம் ஒன்றியம் இச்சிபுத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சிமெண்டு சாலையில் ஆழமான பள்ளம் ஏற்பட்டு பல மாதங்கள் ஆகிறது. அது இன்னும் சரி செய்யாமலேயே வைத்துள்ளனர். அந்தத் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தவறி பள்ளத்தில் விழுந்தால் அசம்பாவிதங்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலகிருஷ்ணன், அரக்கோணம்.