வேலூர் குட்டைமேடு காய்கறி மார்க்கெட் அருகே சாலையில் திடீரெனப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயத்துடன் செல்லும் நிலை உள்ளது. தற்போது பள்ளத்தில் விழாமல் இருக்க அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அதன் மீது கற்கள் வைத்து கொடிகட்டி அடையாளமாக வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஷ்ணு, வேலூர்.