மேம்பாலத்தில் வளர்ந்த செடிகள்

Update: 2025-02-09 19:28 GMT

சோளிங்கர்-திருத்தணி சாலையில் நந்தியாற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. அந்தப் பாலம் வழியாக சோளிங்கரில் இருந்து ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை, திருத்தணி, நகரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். மேம்பாலத்தின் பக்கவாட்டில் இருபுறமும் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மேம்பாலத்தில் விரிசல் ஏற்படலாம். நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டாமல் விரைவில் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

-கிருஷ்ணராஜ், சோளிங்கர்.

மேலும் செய்திகள்