பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் முதல் ஒச்சேரி வரை உள்ள மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையின் இரு புறங்களிலும் மணல் குவியல் உள்ளது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் பரவி கிடக்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவதாஸ், காவேரிப்பாக்கம்.