நாகை தாலுகா வடுகச்சேரியில் இருந்து ஒரத்தூர் செல்லும் சாலை மாணிக்கம் பங்கு வரை குண்டும் , குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக தான் ஒரத்தூர் மருத்துவக்கல்லூரிக்கு வடுகச்சேரி, இருகை, மூங்கில்குடி, தேவூர் பகுதிகளில் இருந்து 108ஆம்புலன்சு உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே சேதமடைந்த இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வடுகச்சேரி.