திருப்பூர் வெள்ளியங்காடு நால் ரோட்டில் இருந்து கருப்பகவுண்டன்பாளையம் செல்லும் சாலையின் நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. அந்த இடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைத்து, பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.
-வினோத், வெள்ளியங்காடு.