திருப்பத்தூர் அருகே எலவம்பட்டி ஊராட்சியில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. அங்கு, டாஸ்மாக் கடை அருகே செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டது. தற்போது சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து முற்றிலும் சேதம் அடைந்து, குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவானந்தம், திருப்பத்தூர்.