சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து மும்முனை சந்திப்பு திரும்பும் பகுதியில் சாலையோரத்தில் பள்ளம் உள்ளது. மேலும் அதன் அருகே உள்ள கால்வாயும் திறந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கார் உள்ளிட்ட வாகனங்கள் வளைவில் திரும்பும் போது அதில் சிக்குகிறது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சாலையோர பள்ளத்தை சீரமைத்து, கால்வாயை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.