வேகத்தடைகளில் வெள்ளைநிற பெயிண்டு பூச வேண்டும்

Update: 2026-09-06 20:04 GMT

கந்திலி அருகில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டி முதல் கொள்ளிமேடு வரை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக தார்சாலை போடப்பட்டது. சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வேகத்தடைகளில் வெள்ளைநிற பெயிண்டு அடிக்காமல் உள்ளது. இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது சரிவர தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். சாலையில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை நிற பெயிண்டு அடிக்கவும், வேகத்தடைகள் உள்ள பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக்ராஜ், கெஜல்நாயக்கன்பட்டி. 

மேலும் செய்திகள்