உத்தமபாளையம் கிராமச்சாவடியில் இருந்து கோம்பை செல்லும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை சுருங்கிவிட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அதோடு போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.