திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட அமலிநகர் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை இணைப்பு பகுதி உள்ளது. 2 இடங்களில் உள்ள இணைப்பு பகுதியில் சிமெண்ட் மூடி போட்டு மூடப்படாமல் சாதாரண தகரங்களால் மூடப்பட்டுள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள் தகரத்தில் மிதிக்கும்போது உடைந்து உள்ளே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சிமெண்ட் மூடி கொண்டு பாதாள சாக்கடை இணைப்பு பகுதியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.