கம்பம் எல்.எப். சாலையின் இருபுறங்களிலும் இரவு நேரங்களில் சாலையோர உணவு கடைகள் அதிகம் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு விபத்துகளும் தொடர்ந்து நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.