மதுரை வில்லாபுரம் துளசிராமன் தெரு, பராசக்தி தெரு முழுவதும் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இச்சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அடிக்கடி பழுதாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலையினை முழுவதுமாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.