ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் அன்றாடம் அவ்வழியே பயணிக்கும் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலையில் பயணிப்பதால் வாகனங்களிலும் அவ்வப்போது பழுதாகிறது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைத்துதர நடவடிக்கை எடுப்பார்களா?