ஆரல்வாய்மொழி அருகே அழகியநகர் பகுதியில் நாராயணசாமி கோவில் தெரு உள்ளது. இந் தெரு உள்பட அப்பகுதியில் உள்ள 6 தெருக்களில் குடிநீா் குழாய்கள் பதிப்பதற்காக அலங்கார தரைகற்கள் அகற்றப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது. குழாய்கள் பதித்தபிறகு சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை முறையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்ச்செல்வன், ஆரல்வாய்மொழி.