சென்னை கொரட்டூர் பகுதியில் பல தெருக்களில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. இந்த பகுதியில் குழந்தைகள் உள்ளதால், பெற்றோர்கள் அச்சத்துடனே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.