இரணியல் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்கோவில் சந்திப்பில் இருந்து வட்டம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல மாதங்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைநத சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.