மானூர் வட்டம் வெள்ளப்பனேரி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு பூலாங்குளம் விலக்கிலிருந்து வடக்கு பூலாங்குளம் மார்க்கமாக வெயிலுகாந்தபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. எனவே உடனடியாக சாலையை சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.