ஏலகிரிமலையில் பல்வேறு கிராம சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக ராயனேரி கிராமத்தில் கீழ்காடு செல்லும் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. புத்தூர் கிராம சாலை சேதம் அடைந்து, மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. அந்தச் சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளும், பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகளும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். ஏலகிரிமலை கிராமச் சாலைகளை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நரசிம்மன், ஏலகிரிமலை.