புழுதி பறக்கும் சாலையால் மக்கள் அவதி

Update: 2026-10-11 16:56 GMT

ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். சென்னை-மும்பை சாலையில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை செல்லும் பகுதியில் புழுதி பறக்கும் மண் சாலை உள்ளது. மண் சாலையில் ஆங்காங்கே மண் குவிந்து கிடக்கிறது. வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழும் சம்பவங்களும் ஏற்படுகின்றன. மழை காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். புழுதி பறக்கும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவின், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்