செங்கம் தளவாநாயக்கன்பேட்டையில் இருந்து சங்கம் தியேட்டர் வரை சாலையின் குறுக்கே முக்கிய சந்திப்புகளில் வேகத் தடை அமைக்க வேண்டும். அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளை தடுக்கவும், இருசக்கர வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, செங்கம்.