வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் வந்தவாசி, பாதிரி, சளுக்கை, தாழம்பள்ளம் போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமான நிலையிலும், ஒருசில இடங்களில் குண்டும் குழியுமாகவும் உள்ளது. அதில் சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் செல்லும்போது கற்கள் குத்தி டயர்கள் பஞ்சராகின்றன. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறிய நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலை இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பழுதான சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரராகவன், பாதிரி கிராமம்.