வேலூர் ரங்காபுரம் புதிய பாலாற்றுப் பாலத்தில் இருந்து ரங்காபுரம் ஊருக்குள் செல்லும் இணைப்பு சாலையில் பாரத விலாஸ் தெரு உள்ளது. இங்கு சாலையின் நடுவில் குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் பெரிய பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. குழாய் உடைப்பை சரி செய்து, மக்களை பயமுறுத்தும் மரண பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தினேஷ், ரங்காபுரம்.