பரங்கிப்பேட்டை அண்ணன்கோயில் பகுதியில் செல்லும் சுமார் 3 கி.மீ. சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும் வாகனங்களும் அடிக்கடி பழுதடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். வாகனஓட்டிகள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும் குழியுமான சாலையை சரிசெய்து புதிதாக அமைத்து தர வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.