சிறுபாக்கம்-திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில், சிறுபாக்கம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் மாணவர்கள், ஆசிரியர்கள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.