தஞ்சாவூர் மாவட்டம் பின்னையூர் கிராமத்தில் உள்ள கீழக்கோட்டை பாலத்தின் அருகே சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. ஆனால் ஏனோ காரணத்தால் தார்ச்சாலை அமைக்கும் பணியை பாதியில் விட்டு சென்றனர். இதனால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பொதுமக்கள் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை விரைந்து சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை