திருப்பூர் மண்ணரை ஏ.எஸ்.பண்டிட் நகர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தையொட்டிய பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு புதியதாக சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. தொடர்ந்து ரோட்டில் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்ட ரோட்டில் பரப்பப்பட்டன. ஆனால் அதன்பின் சாலை அமைப்பதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இந்த ரோட்டில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றன. 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களும் ஜல்லி கற்கள் தடுக்குவதால் தடுமாறியபடியே செல்கின்றனர். எனவே கிடப்பில் கிடக்கும் சாலைப்பணியை மீண்டும் தொடங்கி தரமான சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ருத்ராதேவி, மண்ணரை.