சென்னை அடையாறு, சாஸ்திரி நகர் 1-வது, 3-வது மற்றும் 6-வது குறுக்கு தெருக்களில் உள்ள சாலைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இதனால் லேசான மழை பெய்தால் கூட, சாலைகளில் தண்ணீர் குட்டை போல தேங்கி விடுகிறது. இந்த சாலைகளில் பள்ளி மற்றும் ஆஸ்பத்திரி அமைந்துள்ளதால், வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.