கபிஸ்தலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலை சேதமடைந்து உள்ளது . அருகில் பள்ளிக்கூடம் உள்ளதால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனால் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பாபநாசம்