திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட காவனூர் ஊராட்சியைச் சேர்ந்த மங்கான்குடிசை செல்லும் இணைப்பு தார் சாலை சாம்பசிவபுரம் வரை செல்கிறது. இந்த சாலை தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு ஏற்ற சாலையாக இல்லாமல் உள்ளது. திமிரி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கன்னடிபாளையத்தில் இருந்து சாம்பசிவபுரம் வரை செல்லும் இணைப்புச் சாலையை தார் சாலையாக அமைத்துத் தர வேண்டும்.
-மணிவண்ணன், காவனூர்.