திருச்சி மன்னார்புரத்தில் இருந்து ஜங்ஷன் பாலத்திற்கு கீழ் செல்லும் சாலையிலும் மற்றும் கல்லுக்குழி திறந்த வெளி மைதானத்தில் இருந்து மன்னார்புரம் செல்லும் சாலையிலும் அரசியல் பிரமுகர் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் பாதசாரிகளுக்கு பெரும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதிகளில் உடனடியாக வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.