வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2026-07-26 19:10 GMT

திருப்பத்தூர் அருகே தோரணம்பதி கிராமத்தில் இருந்து காக்கங்கரை ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் அதிகளவில் வளைவுகள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சாலையில் உள்ள அபாயகரமான வளைவுகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும். அத்துடன் வளைவுகள் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். இரவில் விபத்துகள் நடக்காமல் இருக்க எதிரொலிப்பான் ஸ்டிக்கர்களை ஒட்டுவார்களா?

-தேவதாஸ், தோரணம்பதி.

மேலும் செய்திகள்