சிதம்பரம் கனகசபை நகர் 7-வது குறுக்கு தெருவிற்கு செல்லும் சாலையின் நடுவே பெரிய பள்ளம் உருவாகி 5 மாதங்கள் ஆகிறது. இதனால் இரவு வேளைகளில் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலை பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.