திருச்சி மாவட்டம் 10-வது வார்டுக்குட்பட்ட வடக்கு ஆண்டார் வீதி, வாணப்பட்டறை, நந்தி கோவில் தெரு, இந்திராகாந்தி கல்லூரி மற்றும் காளியம்மன் கோவில் தெரு பகுதிகளில் பிரதான சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.