மலைப்பாதையில் மூடாத தரைப்பாலம்

Update: 2026-07-26 19:04 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. ஏலகிரிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் மலைப்பாதையை விரிவாக்கம் செய்யப்பட்டது. மழைநீர் செல்ல தாழ்வான பகுதிகளில் தரைப்பாலம் அமைத்து மூடப்பட்டது. ஆனால், முதல் கொண்டை ஊசி வளைவிலும், இன்னும் ஒரு சில பகுதிகளிலும் சாலை ஓரத்தில் தரைப்பாலம் மூடாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மலைப்பாதை ஓரத்தில் உள்ள தரைப்பால பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணையன், ஏலகிரிமலை. 

மேலும் செய்திகள்