குடிமங்கலத்தில் இருந்து முத்துசமுத்திரம் வழியாக மசக்கவுண்டன்புதூர், கொண்டம்பட்டி பிரிவு முதல் சனுப்பட்டி வல்லகுண்டபுரம் வரை செல்லும் கிராம இணைப்புச் சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகளின் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தானியங்களை சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். தற்போது சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே கிராம இணைப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும்.
ராஜேந்திரன், குடிமங்கலம்.