உடுமலை கல்யாணி நகரில் உள்ள குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் போக்குவரத்திற்கு ஏதுவாக பிரதான மற்றும் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள பிரதான சாலை ஒன்றில் குடிநீர் வினியோகத்தை கட்டுப்படுத்தக்கூடிய கேட்வால்வு தொட்டி கட்டப்பட்டது.பின்னர் அதன் மீது பாதுகாப்பிற்காக சிலாப் போட்டு மூடப்பட்டது. அது தற்போது தொடர் போக்குவரத்து காரணமாக சேதம் அடைந்து பள்ளமாக காட்சியளிக்கிறது. அதை சீரமைப்பதற்கும் முன் வரவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்கின்ற பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் விபத்துகள் நடக்கிறது. எனவே பேராத்துகள் ஏற்படும் முன், சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?
செல்வன், உடுமலை.