சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-02-15 11:32 GMT

உடுமலை அருகே கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜோதிபாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கிராமத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பிரதானமாக உள்ள ஒரு சாலை சேதமடைந்து பள்ளமாக மாறி உள்ளதுடன் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் தட்டுத்தடுமாறி செல்கிறது. மேலும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காமராஜ், உடுமலை.

மேலும் செய்திகள்