திருப்பூர் குமரன் ரோட்டின் குறுக்கே பார்க் ரோடு மற்றும் யுனிவர்சல் ரோடை இணைக்கும் வகையில் சுரங்கப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது குமரன் ரோட்டில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வாகனப்போக்குவரத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் குமரன் ரோட்டில் இருந்து வளர்மதி பாலத்திற்கு வாகனங்கள் யுனிவர்சல் ரோடு வழியாக சுற்றி வருகின்றன. இந்த நிலையில் வளர்மதி பாலத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே அங்கு நடைபாதையில் கடை போட்ட வியாபாரிகள் தற்போது யுனிவர்சல் சாலையின் ஓரம் கடை விரித்துள்ளனர். இது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் இங்கு அதிக கடைகள் போடப்படுவதால் பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை போலீசார் கவனிப்பார்களா?
-யுவராஜ், ராயபுரம்.